நடிகை அஞ்சலியை வலைவீசி தேடும் நடிகை அனுஷ்கா ஷெட்டி – என்ன காரணம்?

கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு சில வருடங்களுக்கு முன் நடிக்கச் சென்ற அஞ்சலி ஒன்றிரண்டு படங்கள் நடித்தபிறகு திடீரென உடல் எடை அதிகரித்தார். ஸ்லிம்மான அவரது தோற்றம் குண்டுபூசணிக்காய்போல் ஆனது. பட வாய்ப்புகளும் குறைந்தது.

சுதாரித்துக்கொண்ட அஞ்சலி வெயிட் குறைப்பில் கவனம் செலுத்தினார். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என தீவிரமாக இறங்கினார். ஓரளவுக்கு எடை குறைந்தது. இதுபோதாது என நெருக்கமானவர்கள் கூற, மேலும் கடும் பயிற்சியில் ஈடுபட்டார். குண்டு முகம், சதைப்பிடிப்பான தொடைகள், மடிப்புபோட்ட இடுப்பு என்றிருந்த அஞ்சலி தற்போது முகம் வற்றி, தொடைகள் மெலிந்து, மடிப்பு இல்லாத இடுப்பழகி என மெலிந்து விட்டார்.சமீபத்தில் ஐதராபாத்தில் மால் ஒன்றுக்கு ஷாப்பிங் செய்ய வந்த அஞ்சலியை கண்டதும் அங்கிருந்தவர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.அஞ்சலியின் இந்த ஸ்லிம் தோற்றம் இணைய தளத்தில் வைரலானது. இந்த விஷயம் உணவு கட்டுப்பாடு, யோகா என உடற்குறைப்பில் ஈடுபட்டும் பலன் கிடைக்காமல் திண்டாடும் அனுஷ்காவின் காதுக்கு சென்றதையடுத்து உடல் எடை குறைப்பு பற்றி ஆலோசனை கேட்க அஞ்சலியை வலை வீசி தேடிக்கொண்டிருக்கிறாராம்.