அனிதா வீட்டிற்கு விஜய் சென்றது பப்ளிசிட்டி என்று கூறுபவர்களுக்கு இயக்குனர் சேரன் பதிலடி..!

நன்றி சொல்ல வேண்டியது விஜய்க்கு தான் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். விஜய் அனிதா வீட்டிற்கு சென்றது பப்ளிசிட்டிக்காக இல்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டிற்கு தளபதி விஜய் சென்று ஆறுதல் கூறினார். தானும் தங்கையை இழந்தவன் என்பதால் அந்த துயரம் தெரியும் என்று அனிதாவின் சகோதரரிடம் விஜய் தெரிவித்துள்ளார்.அனிதாவின் வீட்டிற்கு சென்ற விஜய்யை பாராட்ட மாட்டேன், அது அவர் கடமை என்று இயக்குனரும், நடிகருமான சேரன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

சேரனின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை பாராட்டியதுடன் நன்றி தெரிவித்தனர். விஜய் ரசிகர்களின் அன்பை பார்த்த சேரன் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.அனிதா வீட்டுக்கு சென்ற விஜய்க்கு உணர்வு ரீதியாக பதிவுட்டேன்.விஜய் ரசிகர்கள் எனக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கீங்க.சொல்ல வேண்டியது விஜய்க்குத் தான் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சேரன்.

நன்றி சொல்ல மாட்டேன், அது அவர் கடமை என்று ஒருவர் கமெண்ட் போட்டதை பார்த்த சேரன் கூறியிருப்பதாவது, நானும் விஜய்யை பற்றிய ட்வீட்டில் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். எனக்கு விஜய்யை தெரியும். அவர் பப்ளிசிட்டிக்காக செய்யவில்லை. அவருக்கு தங்கை பாசம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.