நடிகர் விஜய்யை முதுகில் குத்திய தீவிர விஜய் ரசிகர் – புகைப்படம் உள்ளே

என்னது…! நம்ம விஜய்யை முதுகில் குத்திட்டாங்களா? ஆம், நடிகர் விஜய்யை முதுகில் டாட்டூவாக குத்தியுள்ளார் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர்.

தளபதி விஜய்-யின் ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே போகிறது. சமீபத்தில் கூட நீட் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த பண உதவியையும் செய்துவிட்டு வந்தார் நடிகர் விஜய்.
விஜய் ரசிகர்கள் கட்அவுட், பேனர் என படம் வெளியாகும் நாட்களில் கொண்டாடுவார்கள். இது சாதரணமான விஷயம். ஆனால், நடிகர் விஜயின் புகைப்படத்தை தன்னுடைய முதுகில் பச்சை குத்தியுள்ளார் ஒரு ரசிகர். இதனை விஜயின் தந்தை SAC அவர்கள் பார்த்து புன்னகைப்பது போல ஒரு புகைபடம் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.