ஆப்பிள் ஐவாட்ச்-ன் அதிகாரபூர்வ பக்கத்தில் தல அஜித்தின் விவேகம்..!

உலகின் நம்பர் ஒன் ஐபோன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் நிறுவி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று நடைபெற்ற விழாவில் ஆப்பில் ஐபோன் 8 மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆப்பிள் வாட்ச்சில் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படத்தின் போஸ்டரும், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ‘விவேகம்’ படத்தின் போஸ்டர் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் செய்த விமர்சகர்கள் இந்த விளம்பரத்தை கண்டு மூச்சடைத்து இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.