அமெரிக்காவில் மட்டும் 800 தியேட்டர்களில் ஸ்பைடர் ரிலீஸ்

இந்தியத் திரையுலகில் வெளிவரும் ஒரு மாநில மொழித் திரைப்படம் அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாவது தனிப் பெரும் சாதனைதான். அப்படி ஒரு சாதனையை இதற்கு முன் ‘பாகுபலி 2’ படம் நிகழ்த்தியது. அந்தப் படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 1000 தியேட்டர்கள் வரை வெளியாகி, 100 கோடி ரூபாயை வசூலித்தது.

இப்போது அந்த சாதனையை நெருங்கும் விதத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீதி சிங் நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படம் 800 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கில் சுமார் 300 இடங்களிலும் தமிழில் சுமார் 200 இடங்களிலும் படம் வெளியாவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அது மட்டுமல்ல படம் வெளியாகும் 27ம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக 26ம் தேதி நண்பகலிலேயே சிறப்பு பிரிமீயர் காட்சிகளையும் நடத்த உள்ளார்கள். தெலுங்கில் 600 தியேட்டர்களிலும், தமிழில் 200 தியேட்டர்களிலும் இப்படம் வெளியாக உள்ளது. படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் அமெரிக்க வசூல், 100 கோடியைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.