எலுமிச்சை

ஆசிரியர் - Editor
எலுமிச்சை

பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டைவலி, வாந்தி இவற்றிற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. காலரா கிருமியை அழிக்கும். பல் நோய்களை தீர்க்கும். வாய் நாற்றம், சரும வியாதி, டான்சில், வாய்ப்புண், தேள்கடி, விசம், மஞ்சள் காமாலை, வீக்கம், வாயுத்தொல்லை, பசியீனம், நகசுற்று, யானைக்கால் வியாதி, இவை அனைத்திற்கும் நல்ல குணத்தை கொடுக்கும்.

ஓட்டலில் சாப்பிடுவோர்

சுத்தமற்ற வேகாத சமயலை சாப்பிட நேர்ந்தால் ஏற்படகூடிய பல தொல்லைகளை நீக்க 2 எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து, நல்ல பெருங்காயத்தைக் கலந்து, உப்பு சேர்த்துத் தினமும் பருகலாம்.

கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலிற்கு உண்டு. எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ச்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.

களைப்பு தீர

களைப்பை நீக்க ஒரு எலுமிச்சை கடித்து சாறை குடிக்கவோ, பிழிந்து சர்க்கரை அல்லது உப்பு சேர்த்தோ பருக உடனடி தெம்பு கிடைக்கும்.

உண்ணாவிரதம் முறிப்போர்க்கு

மீண்டும் உண்ணும் போது எலுமிச்சை பழச்சாறு அருந்தி உணவு உண்டால் தான் சீரடப் பிரச்சினைகளை தடுக்கலாம்