எள்

ஆசிரியர் - Editor
எள்

உடல் இளைக்க அல்லது பருக்க

காலை எழுந்தவுடன் சுமார் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். 3மணி நேரம் வேறு எதுவும் உண்ணக்கூடாது, குச்சி உடம்பு உள்ளவர்களுக்கு சதை போடும். குண்டானவர்கள் இளைப்பர்,

படுக்கையில் சிறுநீர்

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெண்முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால். அப்பழக்கம் ஒழியும்

மூல நோய் உடையவர்கள்

மூல நோய் உடையவர்கள் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் பயன் தெரியும்.

ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் நுரைத்த எள்ளுடன் தேனையும் நெய்யையும் கலந்து தடவ குணமாகும்.

பல் பலவீனம் உடையவர்கள்

தினசரி காலை ஒரு கைப்பிடி எள் சாப்பிட்டால் பற்கள் பலப்படும்.

தோழுநோய்க்கு

எள், உப்பு, மிளகாய் வகைக்கு 5 கிராம் எடுத்து லேசாக வறுத்து, இடித்து, சலித்துப் பாட்டிலில் போட்டு வைத்துத் தினசரி காலை, மாலை 2 சிட்டிகை அளவு பசு நெய்யில் கலந்து 21 நாள் செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை 1 உருண்டை வீதம் உண்டு வெந்நீர் பருகுக. 21 நாட்கள் இவ்வாறு சாப்பிட நீரிழிவு குறையும். இனிப்பை இந்நேரம் தவிர்க்க தினம் பாகற்காய் சேர்க்கவும்.