இஞ்சி

ஆசிரியர் - Editor
இஞ்சி

பாதி சுண்டு விரல் அளவு இஞ்சி, ஒரு கைபிடி அளவு புதினாக்கீரையை சேர்த்து அரைத்து சாறெடுத்து, தேக்கரண்டி தேனுடன் கலந்து உண்டு சிறிது வென்னீர் பருகவேண்டும். இவ்வாறு 6 வேளை பருகிட காய்ச்சல் தீரும். இதனால் எந்த பக்கவிளைவும் வராது.

கர்ப்பிணி பெண்கள் விக்கல் நிற்க 2 தேக்கரண்டி இஞ்சிச்சாறுடன் புளியங்கொட்டை அளவு திப்பிலியும் அதே அளவு கடுக்காயும் சேர்த்து மை போல் அரைத்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.

இஞ்சியை அரைத்து தலைவலிக்கு கனமாக பற்றுப் போட்டால் கால் மணி நேரத்தில் தீரும்.

சுண்டுவிரல் அளவு இஞ்சியும், சித்தரத்தையும் நைத்து , ஒரு டம்ளர் நீரில் கசாயமாக காய்த்து காலை, மாலை இருவேளையும் அரை டம்ளர் வீதம் சர்க்கரையுடன் பருகி வர காச நோய் காணாமல் போகும்.

காலையில் பாக்களவு தோல் சீவிய இஞ்சியை மென்று சாப்பிடவும். மதியம் அதே அளவு சுக்கை சாப்பிடவும். இரவில் அதே அளவு கடுக்காய் சாப்பிடவும். 3வேளையும் இவ்வாறு சாப்பிட்டு நீர் அருந்தலாம். இவற்றை உணவுக்கு முன் உண்ண வேண்டும். தொடர்ந்து 29 நாட்கள் உண்ண வேண்டும், 3 நாள் இடைவளி விட்டு மீண்டும் 21 நாட்கள் உண்ண வேண்டும். இவ்விதம் 40 நாட்கள் சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது, தேகம் உறுதியாகும்