அலோசியஸ் மற்றும் கசுன் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஆசிரியர் - Admin
அலோசியஸ் மற்றும் கசுன் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை மார்ச் மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தலை கூரியர் சேவை மூலம் சிங்கப்பூரில் உள்ள அவரது வீட்டு முகவரி அனுப்புவதற்கு முயற்சித்த போதும் அவ்வீடு மூடப்பட்டிருந்நததாக நீதிபதி மூலம் இன்று நீதிமன்றில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.