உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு

ஆசிரியர் - Admin
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு

நாட்டின் அநேகமான பகுதிகளில் 40 வீதமான வாக்காளர்கள் தமது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

காலை 10 மணிவரையான காலப்பகுதியில் 22 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்,

கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 10.30 மணியளவில் 25 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சுந்தரம் அருமைநாயகம் கூறியுள்ளார்.

வவுனியா மாவட்டத்திலும் 45 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

இதனை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதான பத்திரன உறுதிப்படுத்தினார்.

மன்னார் மாவட்டத்தில் காலை 10 மணியளவில் 40 வீத வாக்குகள் அளிக்கப்பட்டதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் முற்பகல் 10 மணிவரையான காலப்பகுதியில் 30 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் துஷித பி.விஜயசிங்க குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் காலை ஏழு மணியிலிருந்து 10.30 வரையான காலப்பகுதியில் 50 வீதமான வாக்குப்பதிவுகள் நிறைவுப் பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி என்.ஏ.ஏ.புஷ்பகுமார குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் மலையகத்தில் வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை தலைநகரில் வாழும் வாக்களார்களும் இன்று காலை முதல் அர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்