ஐ.பி.எல் போட்டிகளின் ஏலத்தில் பங்குபற்ற 1122 வீரர்கள் கையொப்பம்

ஆசிரியர் - Admin
ஐ.பி.எல் போட்டிகளின் ஏலத்தில் பங்குபற்ற 1122 வீரர்கள் கையொப்பம்

ஐ.பி.எல் போட்டிகளின் ஏலத்தில் பங்குபற்றுவதற்காக 1122 வீரர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகளின் 11 ஆவது போட்டிகள் இந்த வருடம் நடைபெறவுள்ளன. அதனடிப்படையில் சித்திரை மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் ஏலம் எதிர்வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.பி.எல் போட்டிகளில் வீரர்களுக்கான ஏலத்தில் பங்கேற்கவுள்ள வீரர்கள் கையொப்பமிடுவதற்கான இறுதி நாள் நேற்று வெள்ளிக் கிழமையுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இன்று ஐ.பி.எல் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் வெளிநாடுகளில் இருந்து 282 வீரர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள 840 உள்நாட்டு வீரர்கள் உட்பட 1122 வீரர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அதிகபட்சமாக அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த 58 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 57 பேரும், மேற்கிந்தியா மற்றும் இலங்கையில் இருந்து தலா 39 பேரும், நியூசிலாந்தில் இருந்து 30 பேரும், இங்கிலாந்தில் இருந்து 26 பேரும் ஏலத்தில் பங்கேற்கேற்கவுள்ளனர்.மேலும் அமெரிக்காவில் இருந்து 2 வீரர்களும், ஸ்காட்லாந்தில் இருந்து ஒரு வீரரும் பங்கேற்றகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!