இந்திய அணியில் மாற்றங்களை எற்படுத்தும் முடிவு முட்டாள் தனமானது

ஆசிரியர் - Admin
இந்திய அணியில் மாற்றங்களை எற்படுத்தும் முடிவு முட்டாள் தனமானது

இந்திய அணியில் அதிக மாற்றங்களை ஏற்படுத்துவது முட்டாள் தனமான முடிவாகும் என தென்னாபிரி்க்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலே தொடர்ந்த கருத்து தெரிவித்த அவர், ‘‘தவான் ஒரு சிறந்த அதிரடி ஆட்டக்காரர், இந்திய அணி அவரை மாற்றினால் அது தென்னாபிரிக்க வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரகானே அணியில் இடம்பிடிக்காதது இந்தியாவுக்கு மிகவும் கடினமான நிலை என தான் நினைப்பதாகவும், அவர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரரெனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் ஏற்படுத்தப்படும் இவ்வாறான மாற்றங்கள் தென்னாபிரிக்காவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.