முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

ஆசிரியர் - Admin
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை 7 மணிமுதல் 6 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

அதேசமயம் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான காரைக்குடியில் உள்ள வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சரின் அனைத்து வீடுகளிலும் நடைபெறும் திடீர் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது.

முன்னதாக தொடர்ந்து மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் முன்னாள் மத்த்டிய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!