என்னது..? – 2.0 படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு தானா..? – ரசிகர்கள் ஷாக்

ஆசிரியர் - Admin
என்னது..? – 2.0 படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு தானா..? – ரசிகர்கள் ஷாக்

2.0 படம் கோடை விடுமுறை விருந்தாக வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.

ஆம், வழக்கமாக தமிழ்ப்படங்கள் என்றால் இரண்டரை மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை இருப்பது தான் இயல்பு. ஆனால், 2.0 திரைப்படத்தின் ரன்னிங் டைம் வெறும் 98 நிமிடங்கள், அதாவது ஒன்றரை மணி நேரம் மட்டும் தானாம். இதனால் ரசிகர்கள் சற்று ஷாக் ஆகித்தான் போனார்கள். இந்த தகவல்கள் உண்மை தானா..? அல்லது வதந்தியா என்று விசாரணை வலையை வீசியபோது. இந்த தகவல்கள் உண்மை தான் என தெரியவந்துள்ளது.

கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க பாஸ்..! 98 நிமிடம் என்பது ஹாலிவுட்டில் வெளியாகும் 2.0 படத்திற்கு மட்டும் தான்.பாடல் காட்சிகள், காமெடி காட்சிகள் என அனைத்தையும் வெட்டி வீசிவிட்டு ஹாலிவுட் பாணியில் படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும் படு ஸ்பீடாக 98 நிம்டங்களுக்குள் அடக்க முடிவு செய்துள்ளது படக்குழு.

ஆனால், தமிழ் மற்றும் மற்ற இந்திய மொழிகளில் வழக்கம் போல இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாகவே படத்தின் ரன்னிங் டைம் இருக்கும்.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!