என் படத்தில் ஜெய் எந்த பிரச்சனையும் செய்யவில்லையே- பிரபல இயக்குனர்

ஆசிரியர் - Admin
என் படத்தில் ஜெய் எந்த பிரச்சனையும் செய்யவில்லையே- பிரபல இயக்குனர்

சமீபத்தில் பலூன் படம் வெளியான போது அப்பட இயக்குனர் சினிஷ், ஜெய் அவர்கள் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறியிருந்தார்.

இதனால் பெரிய பிரச்சனையாக இவ்விஷயம் பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று கலகலப்பு 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுந்தர் சி பேசும்போது, இந்த படத்தில் ஜெய்யால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சொல்லப்போனால் 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45 மணிக்கே தயாராகிவிடுவார்.

ஜீவா மற்றும் ஜெய்யுடன் நிறைய காம்பினேஷன் காட்சிகள் இருந்தது, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தான் போனது என்றார்.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!