விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் நூறாவது செயற்கைகோள் ! - வெற்றிக்கொண்டாட்டத்தில் இஸ்ரோ

ஆசிரியர் - Admin
விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் நூறாவது செயற்கைகோள் ! - வெற்றிக்கொண்டாட்டத்தில் இஸ்ரோ

இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளை சுமந்துசெல்லும் பி.எஸ்.எல்.வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி சி-40, 1,323 கிலோ எடை கொண்ட 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இதில் 3 இந்திய செயற்கைக்கோள்களும், 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் உள்ளன.

செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டில், மூன்று இந்திய செயற்கோள்களும், அமெரிக்கா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் செயற்கைக்கோள்கள் 28ம் உள்ளன. கார்டோசாட் - 2, செயற்கைக்கோளின் எடை 710 கிலோ.
ராக்கெட் ஏவப்பட்ட 2.21 மணி நேரத்தில், பூமியில் இருந்து, 505 கி.மீ., உயரத்தில், புவிவட்டப் பாதையில் கார்டோசாட் - 2 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட் காலம் 5 ஆண்டுகள்.

கார்டோசாட் - 2 செயற்கைக்கோளில் துல்லியமாக படமெடுக்கும் கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, பூமியின் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் இருந்து படமெடுத்து அனுப்பும்.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!