முறிகள் மோசடி போன்ற முறைகேடுகள் இனி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை

ஆசிரியர் - Admin
முறிகள் மோசடி போன்ற முறைகேடுகள் இனி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை

ஜனாதிபதியின் ஆலோசனையின் பின்னர் மத்திய வங்கியின் நிதிச்சபை 10 பக்கங்களைக்கொண்ட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி போன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் நிதிச்சபை அதில் தௌிவுபடுத்தியுள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம், முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நம்பகத்தன்மை மற்றும் நிர்வாகம் என்பனவற்றை தொடர்ந்தும் மேம்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!