நந்திக்கடல் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

ஆசிரியர் - Admin
நந்திக்கடல் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நந்திக்கடல் பகுதியில் சில மீனவர்கள் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் இறால், மீன், நண்டு இனங்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு 20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத வலைகளைக் கைப்பற்றியதாக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பொலிஸாருடன் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!