கப்பலுடன் மோதிய படகு: பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு

ஆசிரியர் - Admin
கப்பலுடன் மோதிய படகு: பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு

தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் குடும்பத்திற்கும், ஒரு மில்லியன் ரூபா நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய, குறித்த அமைச்சின் செயலாளரான ஜெகத் பி.விஜேவீரவுக்கு இந்த ஆலோசனை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ம் திகதி இரவு தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் மீன்பிடிப் படகொன்று கப்பலுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், பலியான இருவரின் குடும்பத்திற்கும் ஒரு மில்லியன் ரூபா நஸ்டஈடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அவர்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கான புலமைப் பரிசில் மற்றும் அந்தக் குடும்பத்திற்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்கி வைக்கவும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, 2017ம் ஆண்டில் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 14 மீனவக் குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!