வார ராசிபலன் 11/01/2018 முதல் 17/01/2018 வரை (மேஷம் முதல் மீனம் வரை)

ஆசிரியர் - Admin
வார ராசிபலன் 11/01/2018 முதல் 17/01/2018 வரை (மேஷம் முதல் மீனம் வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் மற்றவர்களுடன் இருந்த பகை மறையும். ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதன் மூலம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பார்கள். சஞ்சலமான மனநிலை அகலும். தனாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யத் தொடங்குவதால் தர்ம சிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். தம்பதிகளுக்குள் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்குப் பணத்தேவை பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியைத் தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் பாக்கியஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.அஷ்டமத்துச் சனி நடந்தாலும் ராசிநாதன் சஞ்சாரம் மிக அனுகூலமாக இருக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். ராசியைச் செவ்வாய் பார்ப்பதால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய வர்த்தக ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும்.

மனத்தெளிவு ஏற்படும். குடும்பத்தினரின் செய்கைகள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கும். பெண்கள் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். அரசியல்வாதிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். மாணவர்களுக்குக் கல்வி பற்றிய கவலை ஏற்படும். பதற்றத்தைக் குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: ரங்கநாதரைத் தரிசித்து வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்தவொரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மையால் நன்மை கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடிச் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம், அந்தஸ்து கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு முயற்சிகளில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். கலைத்துறையினர் உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கியஸ்தர்களின் உதவி கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வி பற்றிய பயம் நீங்கும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை,மஞ்சள் | எண்கள்: 3, 5

பரிகாரம்: நரசிம்மரை தீபம் ஏற்றித் தரிசித்து வரக் கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல், பயம் குறையும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். தனாதிபதி சூரியன் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது ஏழாம் பார்வையால் ராசியைப் பார்க்கிறார். மற்றவர்கள் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்களிடம் பகை நீங்கும். வீண் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாகப் பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். வாகன வசதி உண்டாகும். பெண்கள் அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். அரசியல்வாதிகளிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மாணவர்கள் பதற்றம் கொள்ளாமல் நிதானமாகப் பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 3

பரிகாரம்: காளியம்மனை வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனஅமைதி பிறக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும். அதிகக் கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். வாகனச் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவைச் சந்திக்க நேரிடும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குக் கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.

குடும்பத்திலிருப்பவர்கள் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேச வேண்டும்.கலைத்துறையினருக்குப் பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்குப் புத்தித் தெளிவு ஏற்படும். மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலில் சிவனையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம். கவனமாகப் பேசுவது நல்லது. தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் ஸ்தானத்தை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் வரும். புதியதாக இடம் வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பாதிபதி சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பெண்களுக்குப் பயணங்கள் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்கள் நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றன்றைக்கே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை | எண்கள்: 5, 9

பரிகாரம்: பெருமாளை வணங்கிவர வாழ்வு வளம் பெறும். மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு சுகஸ்தானத்தில் அனுகூலமாக சஞ்சாரம் செய்கிறார்.கஷ்டம் நீங்கிச் சுகம் உண்டாகும். தனாதிபதி செவ்வாய் சஞ்சாரத்தால் பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் நிலைக்கும். பங்குதாரர்களுடனான பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தடங்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

பணி நிமித்தமாகப் பயணம் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்திலிருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்துப் பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே வருத்தங்கள் நீங்கும். அக்கம்பக்கத்தவரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்கள் மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். கலைத்துறையினருக்குப் பழைய பாக்கிகள் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை,மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டு வர பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்கள் செய்யத் தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களைச் செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நெருக்கம் அதிகரிக்கும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்குப் பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்குப் பேச்சு சாதுரியத்தால் எடுத்த காரியம் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்கள் கல்வி முயற்சிகள் கைகூடும். எதிர்காலக் கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 5, 9

பரிகாரம்: முருகப் பெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் மன உறுதி அதிகரிக்கும். ராசியில் சனி பகவானுடைய சஞ்சாரம் இருந்தாலும் மற்ற கிரகங்கள் அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. சொத்துக்களைப் பெறுவதில் தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனச் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வீட்டுக்குத் தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, மனை வாங்கத் தடைகள் அகலும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும்.

புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் வீட்டில் ஏற்படலாம். குழந்தைகள் தொடர்பான கவலை உண்டாகும். பெண்களுக்குத் திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.அரசியல்வாதிகள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால்வெற்றி நிச்சயம். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரியத் தடை, தாமதம் ஏற்படலாம். சூரியன் சஞ்சாரம் ராசியில் இருப்பதால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படுத்தும். வீண்பயம் ஏற்படும்.சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்.சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர்ப் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தவருடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ராசியில் இருக்கிறார். தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். கடன் தொல்லை நீங்கும்.உத்தியோகத்திலிருப்பவர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் இருக்கும்.தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும்.கலைத்துறையினருக்கு யோககாரகன் சுக்கிரன் ராசியில் இருப்பதால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் கவனமாகப் பாடங்களைப் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, மேற்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 6, 9

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் மிகப் பெரிய மாற்றங்களைச் சந்திப்பீர்கள். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தைரியம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் வேகப்படும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.

உத்தியோகத்திலிருப்பவர்கள் அலைச்சலையும்,வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்திலிருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் கணவன் மனைவி பரஸ்பரம் அனுசரித்துச் செல்வதும் நல்லது. பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். கலைத்துறையினர் நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.அரசியல்வாதிகள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையைத் தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை,நீலம் | எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு அனுகூலமாக இருக்கின்றன. மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 11-ல் இருப்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். தொல்லைகள் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். தைரியம் பிறக்கும். செவ்வாய் சஞ்சாரம் வாக்குவன்மையைத் தரும். உயர்மட்டப் பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும்.தொழில் தொடர்பான செலவும் கூடும்.

சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்திலிருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.கலைத்துறையினருக்கு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.அரசியல்வாதிகள் மேலிடத்துக்குப் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வி உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு,மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்: தினமும் வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றி தரிசித்தால் மன அமைதி கிடைக்கும்.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!