டெஸ்ட் தரவரிசையில் முதலாமிடத்தை தக்கவைத்துள்ள இந்தியா

ஆசிரியர் - Admin
டெஸ்ட் தரவரிசையில் முதலாமிடத்தை தக்கவைத்துள்ள இந்தியா

ஐ.சி.சி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா அணி முதலாம் இடத்தை தக்கவைத்துள்ளது.

ஒவ்வொரு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஐ.சி.சி அணிகளின் மதிப்பீட்டில் புள்ளிகளை வழங்கி அணிகளை தரவரிசைப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ள இந்தியா மற்றும் இலங்கை, அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய போட்டிகளின் பின் ஐ.சி.சி டெஸ்ட் போட்டிக்கான அணிகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் 124 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 1 ஆம் இடத்தில் இந்தியா அணியும், 2 ஆவது இடத்தில் 111 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா அணியும், 3 ஆவது இடத்தில் 104 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியா, அணியும் 4 ஆவது இடத்தில் 100 புள்ளிகளுடன் நியுசிலாந்து அணியும், 5 ஆவது இடத்தில் 99 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணிகள் உள்ளன. அதனைத்தொடர்ந்து முறையே இலங்கை(94), பாக்கிஸ்தான்(88), மேற்கிந்தியா(72), பங்களாதேஸ்(72) மற்றும் ஜிம்பாபே(1) அணிகள் 10 இடங்களுக்குள் உள்ளன.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!