ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆதார் அவசியம் ; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

ஆசிரியர் - Admin
ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆதார் அவசியம் ; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் முறையே பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவின்பேரில் இதற்கான ஆலோசனைக்கூட்டம் வாடிப்பட்டி தாசில்தார் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 20 வயதிலிருந்து 40 வயது உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்களின் எடை 50 கிலோவாக இருக்க வேண்டும் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்க டோக்கன் வாங்க வரும் வீரர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் போன்றவற்றைக் கொண்டு வர வேண்டும். மாடுகளுக்கு டாக்டர் கொடுத்த சான்றிதழுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பின் காரணமாக ஆதார் இல்லாத மாடு பிடி வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!