தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது - விஜயகாந்த்.!

ஆசிரியர் - Admin
தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது - விஜயகாந்த்.!

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களுக்கு எதிரான ஓர் ஆட்சி நடைபெற்றுவருவதாகவும், இந்த ஆட்சி குறித்து தாம் கருத்து கூறவே விரும்பவே இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்

சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் நேற்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஏழைகளுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இரண்டாயிரம் பேருக்கும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். விழாவில் பிரேமலதா, சுதீஷ் மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஜயகாந்த், "மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையே இல்லை. எங்கு போனாலும் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்று கேட்கிறார்கள். உண்மையில் எனக்கு எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச விருப்பமே இல்லை. அந்த அளவிற்கு ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!