கனடாவில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு - வீதிகளில் பயண எச்சரிக்கை!

ஆசிரியர் - Admin
கனடாவில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு - வீதிகளில் பயண எச்சரிக்கை!

கனடா நாட்டின், ரோறொன்ரோ நகரில் விடுமுறைக்கு பின் பாடசாலைகள் மற்றும் நாளாந்த அலுவலக பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில்,

வீதி போக்குவரத்து குறித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜி.டி.ஏவின் பெரும்பகுதிகளில் வீதிகள், பனியால் மூடப்பட்டுள்ள காரணத்தாலேயே, மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலைக்கு செல்வோர் மற்றும் பணிக்கு திரும்புவோர் என ஆயிரக்கணக்காணோர் வீதிகளில் கவனமாக வாகனத்தைச் செலுத்துவதால், விபத்துக்களை தவிர்க முடியும் என்றும், கனடா தேசிய வானிலை மையமானது நேற்று, குறித்த பகுதிகளில் 4-8 சென்டிமீற்றர் அளிவில் பனிப்பொழிவு காணப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இதேவேளை, வடகிழக்குப் புறநகர் பகுதிகளில், 10 சென்டிமீற்றர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக, எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!