பேச அனுமதி மறுப்பு ; வெளிநடப்பு செய்தார் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின்.!

ஆசிரியர் - Admin
பேச அனுமதி மறுப்பு ; வெளிநடப்பு செய்தார் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின்.!

இந்த ஆண்டிற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரானது கடந்த 8 ஆம் தேதி துவங்கி வரும் 12 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று, குட்கா விவகாரம் தொடர்பாக சபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர்.

தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துவிட்டு குட்கா தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தை விசாரித்து வந்தார் ஐஏஎஸ் அதிகாரி ஜெயக்கொடி.

ஆனால், திடீரென ஜெயக்கொடி நேற்று மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சபாநாயகர் ஸ்டாலினை பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தனர் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!