பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா

ஆசிரியர் - Admin
பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

வருடாந்தத் திருவிழா தொடர்பான கலந்துரையாடலொன்று யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இன்று நடைபெற்றது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் முன்னெடுக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார குறிப்பிட்டார்.

அதற்கான திட்டங்களை வகுக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை – தமிழக மீனவர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் நிகழ்வாக கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா அமைந்துள்ளது.

எனினும், கடந்த ஆண்டு தமிழக மீனவர்கள் திருவிழாவைப் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவிற்கு அருகேயுள்ள கடலில் தமிழக மீனவர்கள் சிலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், திருவிழாவிற்கு தமிழக மீனவர்கள் எவரும் வருகை தரவில்லை.

எவ்வாறாயினும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவில் இம்முறை பங்கேற்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இராமேஸ்வரம் பங்குத்தந்தை அந்தோனிச்சாமி குறிப்பிட்டார்.

இதுவரை நம்முடைய New Ceylon

முகநூல் பக்கத்தை லைக் செய்யாமல் இருந்தால் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!