ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்யூஸ்

ஆசிரியர் - Admin
ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்யூஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவராக அஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அணித்தலைவர் மெத்யூஸ் உபாதை காரணமாக தற்காலிகமாக அணியிலிருந்து நீங்கியிருந்ததுடன் அவருக்கு பதிலாக தினேஷ் சந்திமால், உபுல் தரங்க, லசித் மாலிங்க, திசர பெரேரா ஆகியோர் 3 தடவைகள் அணியை வழி நடாத்தியிருந்தனர்.

30 வயதுடைய அஞ்சலோ மெத்யூஸ் எதிர்வரும் இலங்கை சிம்பாப்வே பங்களாதேஷ் முக்கோண ஒருநாள் தொடரை வழி நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.