06-01-2018 இன்றைய ராசிபலன்

ஆசிரியர் - Admin
06-01-2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் விதமாக ஒரு சம்பவம் நிகழக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகக்கூடும். அலுவலகத்தில் உங்கள் சமயோசிதமான ஆலோசனை பலராலும் பாராட்டப் படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

ரிஷபம்: இறைவழிபாட்டுடன் நாளைத் தொடங்குவீர்கள். உங்கள் உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். தாய்வழி உறவினர் களால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்: இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்: அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் உதவி கேட்டு வருவார். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

சிம்மம்: உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி: தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். காலையிலேயே குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கூடுதல் கவனமாக இருக்கவும்.

துலாம்: எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலுத்துக்கொள் ளாமல் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. கூடுமானவரை வெளியூர்ப் பயணங்களையும் தவிர்த்துவிடவும். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.

மகரம்: உற்சாகமான நாளாக அமையும். உங்கள் வார்த்தைகளும் செயல்களும் மற்றவர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தும். ஆனால் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுப்பதையும் தவிர்க்கவும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கும்பம்: பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர் களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப் படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பில்லை. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மீனம்: புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். முக்கிய முடிவு எடுப்பதில் குடும்பத்தினரின் ஆலோசனை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக சற்றே சோர்வு உண்டாகும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.