முதல்வர் ஜெயலலிதா இறந்த நேரம் – விசாரணையில் வெடித்த சர்ச்சை – உண்மை என்ன..?

ஆசிரியர் - Admin
முதல்வர் ஜெயலலிதா இறந்த நேரம் – விசாரணையில் வெடித்த சர்ச்சை – உண்மை என்ன..?

சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தமிழக முதல்வர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் செல்வி.ஜெ.ஜெயலலிதா. ஆனால், இவரது மரணமும், அதன் பிறகு நடந்த நிகழ்வுகளும் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்து வருகின்றது. அந்த வகையில், இவர் இறந்த நேரம் என்ன? என்பதில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

ஆம், ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது உடலை எம்பாஃமிங் செய்த மருத்துவர் சுதா-விற்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இது குறித்து நேற்று ஆஜராகி விளக்கமளித்தார் எம்பாஃமிங் மருத்துவர் சுதா.

இதில், டிசம்பர் 5-ம் தேதி இரவு சரியாக 10:30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனயில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள், ஜெயலலிதா-வின் உடலை எம்பாஃமிங் செய்யவேண்டும் என்றும் விரைந்து மருத்துவமனைக்கு வருமாரும் என்னிடம் கூறினார்கள். நான் 11:40 மணிக்கு அப்போல்லோ மருத்துவமனை சென்றடைந்தேன். பிறகு 12:20 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் எம்பாஃமிங் செய்யப்பட்டது என கூறியுள்ளார்.

ஆனால், மருத்துவமனை வெளியிட்ட குறிப்பில் ஜெலலிதா 11:30 மணிக்கு இறந்தார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. 11:30 மணிக்கு இறந்தவரை எம்பாஃமிங் செய்ய ஒரு மணி நேரம் முன்பே எம்பாஃமிங் மருத்துவரை அழைத்துள்ளது அப்பல்லோ மருத்துவமனை. இதனால் ஜெயலலிதா இறந்த நேரம் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது.