ஜனவரி 8 ஆம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை ; சரவெடியாய் வெடிக்கப்போகும் தினகரன்.!

ஆசிரியர் - Admin
ஜனவரி 8 ஆம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை ; சரவெடியாய் வெடிக்கப்போகும் தினகரன்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 8 ஆம் தேதி துவங்கி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குமெனவும் செய்திகள் வெளியாகியுள்ள சூழலில் பல அதிரடி காட்சிகளுக்கு தமிழக சட்டமன்ற அவை தயாராவதாகவே தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் முன்னர் உள்ள நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

முன்னதாக, தினகரன் - சசிகலா குடும்பத்தினரை அரசியலை விட்டே முழுதாக விலக்கிட வேண்டுமென அதிமுக அரசும், பாஜகவும் கச்சைகட்டிக்கொண்டு செயல்பட்ட நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்று தினகரன் சட்டசபைக்குள் நுழைவது பல அதிரடிகளுக்கு வழி வகுக்கும் என்பதில் மிகையில்லை.