நத்தார் தினத்தில் கியுபாவில் ஏற்பட்ட சோகம் - 39 பேர் வைத்தியசாலையில்

ஆசிரியர் - Admin
நத்தார் தினத்தில் கியுபாவில் ஏற்பட்ட சோகம் - 39 பேர் வைத்தியசாலையில்

கியுபாவில் ரெமீடியாஸ் நகரில் வானவேடிக்கை நிகழ்வின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 39 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நத்தார் தினத்தை முன்னிட்டு ரெமிடியாஸ் நகரில் பல நூற்றாண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் கொண்டாட்ட விழாக்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வந்தன.

இந்த விழாக்களில் சுற்றுலாப்பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நத்தார் தினத்தையொட்டி பாரிய வான வேடிக்கை நிகழ்ச்சிகள் குறித்த பகுதியில் நடததப்பட்டிருந்தன.

இதன்போது திடிரென ஏற்பட்ட வெடி விபத்தினால் குறித்த வெடிகள் அனைத்தும் தொடர்ந்து வெடிக்க ஆரம்பித்தன.

இதனால் குறித்த நிகழ்சியை பார்க்க வந்த பார்வையாளர்களில் 39 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, காயமடைந்தவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதுடன், படுகாயமடைந்தவர்களில் 11வயது முதல் 15 வயதுவரையான 6 சிறுவர்களும் அடங்குவதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.