பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து: 37 பேர் பலி!

ஆசிரியர் - Admin
பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து: 37 பேர் பலி!

தெற்கு பிலிப்பைன்ஸில் தவாவோ நகரில் வணிக வளாகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 37 பேர் பலியாகியுள்ளதாக இன்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு உடனடியாக

அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே விஜயம் மேற்கொண்டு பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் பணியாற்றிய தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், மேற்படி தீ விபத்தில் சிக்கிய எவரும் அதிக வெப்பம் மற்றும் புகை காரணமாக உயிர் பிழைக்க வாய்ப்பில்லை.
எனினும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது. அதற்கான சிறப்பு மையம் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.