வரலாறு படைத்தார் டிடிவி தினகரன் ; டெபாசிட் இழந்தது திமுக.!

ஆசிரியர் - Admin
வரலாறு படைத்தார் டிடிவி தினகரன் ; டெபாசிட் இழந்தது திமுக.!

கடந்த 21 ஆம் தேதி நடத்தப்பட்ட சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையானது இன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் நடத்தப்பட்டது. 19 சுற்றுகளாக நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 89,013 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை விட சுமார் 40707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் தினகரன்.

தமிழக அரசியல் வரலாற்றில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். தமிழக எதிர்க்கட்சியான திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழந்துள்ளன.

மத்திய பாஜக அரசும், தமிழக அரசும் தினகரனுக்கு பல இன்னல்களை அளித்ததாக கூறப்பட்ட நிலையில், அத்தனை எதிர்ப்புகளையும் கடந்து வெற்றிமாலை சூடியிருக்கிறார் தினகரன். அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் நினைவுகளில் மேற்கண்ட வரலாற்று வெற்றி நிகழ்ந்துள்ளது.

தினகரன் வெற்றி பெற்ற அறிவிப்பு வெளியான நிலையில் தினகரனின் இல்லத்தின் முன்பு அதிகளவில் திரண்டு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.