கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதானால்.. அச்சான சின்னங்களை எண்ண முடிவு

ஆசிரியர் - Admin
கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதானால்.. அச்சான சின்னங்களை எண்ண முடிவு

சென்னை: ''ஆர்.கே.நகர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால், அச்சான சின்னங்கள் எண்ணப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இது குறித்து, தலைமை செயலகத்தில், நேற்று அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் தேர்தல், எவ்வித அசம்பாவிதமும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம், 77.5 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் இருந்த, 19வது ஓட்டுச்சாவடியில், அதிகபட்சமாக, 90.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள, 130வது ஓட்டுச் சாவடியில், 60.2 சதவீத ஓட்டுகளே பதிவாகின. கொருக்குப்பேட்டையில், இரவு, 7:43 வரை ஓட்டுப்பதிவு நடந்தது.

ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கையின் போது, கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால், பழுது நீக்கும் இயந்திரத்தை வைத்து, சரி செய்வது வழக்கம். இம்முறை, அதற்கு பதிலாக துண்டு சீட்டில், அச்சான சின்னங்களை எண்ண, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.