கோஹ்லி சிறந்த வீரரா? என்ன சொல்கிறார் வார்ன்

ஆசிரியர் - Admin
கோஹ்லி சிறந்த வீரரா? என்ன சொல்கிறார் வார்ன்

கோஹ்லி சிறந்த வீரர் தான். டெஸ்ட் போட்டி என எடுத்துக் கொண்டால், ஸ்மித் தான் சிறந்தவர்,’’ என, ஷேன் வார்ன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், 48. தன்னுடன் விளையாடிய சக மற்றும் எதிரணி வீரர்கள், இப்போதுள்ள வீரர்களில் சிறந்த 11 பேரை தேர்வு செய்துள்ளார். இதில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளின் இப்போதைய கேப்டன்கள் கோஹ்லி, ஸ்மித்துக்கு 10வது இடம் கொடுத்துள்ளார்.

இது குறித்து வார்ன் கூறியது: இப்போதுள்ள வீரர்களில் கோஹ்லி தான் மூன்று வித கிரிக்கெட்டிலும் சிறந்தவர். ஆனால், ஐந்து நாட்கள் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் என்று எடுத்துக் கொண்டால் ஸ்மித் தான் ‘பெஸ்ட்’. புள்ளி விவரங்களின் படி இதனை கூறவில்லை.

போட்டியில் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர், போட்டியின் முடிவில் அவர்களுக்கு என்ன பங்குள்ளது என்பது குறித்து பார்த்துள்ளேன்.

பந்துகள் ‘சுவிங்’ ஆகும் இங்கிலாந்து, பந்துகள் எகிறும் ஆஸ்திரேலியா, புளுதி பறக்கும் இந்தியா என, இந்த மூன்று வித மைதானங்களில் சதம் அடித்து இருக்க வேண்டும். இந்த வகையில் கடந்த 2014ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில், கோஹ்லி சரியாக விளையாடவில்லை. இம்முறை இங்கிலாந்து தொடரில் கோஹ்லி, சிறப்பாக விளையாடி சதம் அடிப்பார் என நம்புகிறேன். மாறாக, ஸ்மித் (சராசரி 43.31), இங்கு ஏற்கனவே இரண்டு சதங்கள் அடித்துள்ளார். இவ்வாறு ஷேன் வார்ன் தெரிவித்தார்.

‘லெவன்’ அணி விவரம்: ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா (வெ.இண்டீஸ்), சச்சின் (இந்தியா), கிரெக் சாப்பல், பாண்டிங், ஆலன் பார்டர் (ஆஸி.,), காலிஸ், டிவிலியர்ஸ் (தெ.ஆப்.,), கிரகாம் கூச் (இங்கிலாந்து), ஸ்மித் (ஆஸி.,), கோஹ்லி (இந்தியா).