தலைசிறந்த தொழில்நுட்டபத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஜேர்மனிய ரோப் கார்!

ஆசிரியர் - Admin
தலைசிறந்த தொழில்நுட்டபத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஜேர்மனிய ரோப் கார்!

மூன்று உலக சாதனைகளை முறியடிக்கும் வகையில் ஜேர்மனியில் புதிய ரோப் கார் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனி நாட்டின் மிக உயரிய மலையாக கருதப்படும் Zugspitze மலையில் ரோப் கார் சேவை தொடங்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி திட்டமிடுதல், பொருட்கள் வாங்குதல், கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் கடந்து ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனைத்து பணிகளும் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளத்தாக்கில் இருந்து 1,945 மீற்றர் உயரத்தில் உள்ள மலையின் உச்சிக்கு 3,213 மீற்றர் பயணம் செய்து மணிக்கு 600 பயணிகளை அழைத்து செல்லக்கூடிய உலகின் முதல் ரோப் கார் என்னும் பெருமையை பெற்றுள்ளது.

50 மில்லியன் யூரோ செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோப் கார் தலைசிறந்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.