இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் ! இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க

ஆசிரியர் - Admin
இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் ! இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க

வடக்கில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

காணிகளை விடுவிக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் விடுத்த கோரிக்கையையே ஆராய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க யாழ் மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தார். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது யாழ் மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள காணிகள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டுவருகின்றமை தொடர்பில் அரசாங்க அதிபர் இதன்போது இராணுணவத்தளபதிக்கு நன்றி தெரிவித்தார்.

வடக்கில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையிலேயே எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.