அமெரிக்கா தொடர்ந்து பனிப்போர் மனநிலையிலேயே உள்ளது - சீனா

ஆசிரியர் - Admin
அமெரிக்கா தொடர்ந்து பனிப்போர் மனநிலையிலேயே உள்ளது - சீனா

அமெரிக்கா தொடர்ந்தும் பனிப்போர் மன நிலையிலேயே இருப்பதாக சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா புதிதாக வெளியிட்டுள்ள அதன் தேசிய பாதுகாப்புக் கொள்கைப் பிரகடனத்தில் சீனாவும் – ரஸ்யாவும் தொடர்ந்தும் பல விடையங்களில் அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே சீனா இந்தக் கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது.

அமெரிக்கா புதிதாக வெளியிட்டுள்ள அதன் தேசிய பாதுகாப்பு தொடர்பான கொள்கைப் பிரகடனத்தில் சீனா உட்பட சில நாடுகள் அமெரிக்காவிற்கு பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டிற்கு கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ள சீனா, அமெரிக்கா அதன் காலாவதியாகிய எண்ணங்களை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஒரு நாட்டின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அறிக்கைகளை இடுவதன் ஊடாக ஒருபோதும் எந்தவொரு நாடும் வெற்றிபெற முடியாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அதன் பனிப்போர் மனநிலையிலிருந்து வெளிவருவது மாத்திரமன்றி அமெரிக்கா சீனாவின் செயற்பாடுகளை தவறாக அர்த்தப்படுத்துவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கைக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.