கோலியுடன் என்னை ஒப்பிடாதீர்கள் பாகிஸ்தான் வீரர்

ஆசிரியர் - Admin

பாகிஸ்தான் கிரிகெட் அணியில் எதிர்காலம் பாபர் அஸாம், கோலியுடன் என்னை ஒப்பிடுவது சரியாகாது. அவர் அனைத்து வகையான போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக விளையாடி தன்னை நிருபித்துள்ளார்.

நான் பள்ளி பருவம் முதல் டிவில்லியர்ஸின் அபாரமான ஷாட்டுகளை ரசித்து பார்ப்பேன். பயிற்சியின் போது அதைமாதிரி ஆடியும் பார்த்துள்ளேன்.

தற்போது கோலியின் மற்றும் டிவில்லியர்ஸ் ஷாட்டுகளை கவனித்து பார்ப்பதோடு, அதனை ஆடவும் பயின்று வருகின்றேன்.
நான் விளையாடிய 36 ஒருநாள் போட்டியில் 7 சதம், சராசரி 58.60, ஸ்டிரைக் ரேட் 85.88 வைத்துள்ளேன். ஆனால் இந்த புள்ளி விபரம் மட்டும் வைத்து கோலியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என பாபர் அஸாம் தெரிவித்துள்ளார்.