குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி !

ஆசிரியர் - Admin
குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி !

ஆமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,18) எண்ணப்பட்டு வருகின்றன. இதில் முதலில் பா.ஜ., - காங், இடையே கடும் போட்டி நிலவியது. சற்று நேரம் பா.ஜ., பின்னடைவை சந்தித்தாலும், சிறிது நேரத்திலேயே மீண்டும் முன்னிலைக்கு திரும்பியது பா.ஜ.,
குஜராத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் பெரும்பான்மையை பெற 92 இடங்கள் தேவை. அந்த வகையில் பா.ஜ., 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. குஜராத்தில் 1998 ம் ஆண்டு முதல் பா.ஜ.,வே ஆட்சி செய்து வருகிறது. இந்த வரலாற்று சாதனை மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6வது முறையாக குஜராத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. பட்டேல் சமூகத்தினருடனான காங்கிரசின் கூட்டணி குஜராத்தில் எடுபடவில்லை.