எகிப்த் பூர்வகுடிகள் வரலாற்றில் தமிழர்கள் : 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் விதைக்கப்பட்ட தமிழனின் பெருமை!மிரண்டுபோன ஆய்வாளர்கள்!

ஆசிரியர் - Admin

எகிப்தியர்களின் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் தமிழர்களின் தொன்ம அடையாளங்கள் ஏராளம் உள்ளதாக கடல் சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, உலகம் முழுவதும் பரவியது தமிழர்களின் கடல் கடந்த வணிகம். இதில், உலகின் மேற்கு பகுதியை இணைக்க மையப்பகுதியில் இருக்கும் எகிப்து நாட்டின் வணிகம் மிக முக்கியமானது. ஏனெனில், உலகின் மையப்பகுதியில் இருக்கும் நாட்டில் கடல் வணிகம் செய்யும் திறன் பெற்றவர்கள், உலகம் முழுவதும் வணிகம் செய்யும் திறன் பெற்றவர்காளாக இருக்க முடியும். அந்த வகையில், உலக கடல் பயணத்தின் போது ஒரு குறிப்பிட்ட திசையை துல்லியமாக அறியும் வகையில் 1,024 திசை அறியும் திறன், இடி, மின்னல் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் திறன், சுனாமி, கடல் சீற்றம் போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து தப்பிக்கும் திறன் பெற்றவர்களில் கைத்தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில், தமிழர்கள் அனைத்து திறன்களையும் பெற்று கடல் வணிகத்தில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர்கள்.

(எகிப்து, நைல் நதி வழியான தமிழர்களின் கடல் வழி பயணப்பாதை )

உலகின் நடு நிலக்கடல், இந்திய பெருங்கடல், சீனா இணைவில் முக்கிய வணிகர்களாக தமிழர்கள் இருந்துள்ளனர். எகிப்தியர்கள் கடல் வணிகத்திற்கு முயற்சி மேற்கொண்ட போது உலகம் முழுவதும் கடல் வணிகம் மேற்கொள்ள முடியவில்லை. ஏனெனில், தமிழர்களுக்கு மட்டுமே நடுக்கடல் வழியாக கடல் நீரோட்டத்தையும், காற்றையும், கடல் ஆமைகளின் வழிகளையும் துணைக் கொண்டு அக்கரை சீமைக்கு சென்று திரும்பிய திரைமீளர்கள் என்ற பெயரெடுத்தவர்கள்.

எகிப்தியர்கள் ஆரம்பக்கட்டத்தில் துடுப்பு மூலம் கடல் பயணம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால், கடலின் சீற்றம், திசை அறிதல், கால நிலை மாறுபாடுகளால் கடல் பயணம் வெற்றிகரமாக செய்ய முடியவில்லை. ஆனால், தமிழர்கள் பருத்தி துணி கொண்டு உருவாக்கப்பட்ட பாய் மரக் கப்பல் மூலம் செங்கடல் வழியாக எகிப்தில் கடல் வணிகம் செய்தனர். ஆண்டின் முதல் ஆறு மாதம் தென் மேற்கு வழியாகவும், அடுத்த ஆறு மாதம் தென் கிழக்கு வழியாகவும் கடல் பயணம் சிறப்பாக செய்தனர். அதனுடன், பாய்மரக் கப்பல் மூலம் கடலின் நீரோட்டத்திற்கு ஏற்ப, கால நிலைகளை அறிந்து கடல் பயணம் மேற்கொண்டனர். இதன் காரணமாக, எகிப்து உள்பட அனைத்து நாடுகளிலும் சிறந்த முறையில் கடல் பயணம் மேற்கொள்ள முடிந்தது. அதன்பின்னரே, எகிப்தியர்கள் பருத்தி ஆடைகளை அணிந்தனர், அதனை பயன்படுத்தி படகு செய்யவும் ஆரம்பித்தனர். சீனர்களின் பட்டு வழிப்பாதையையும், கிரேக்கர்களின் மிளகு வழிப்பாதையையும் இணைத்த தமிழர்கள் தனக்கு என்று பருத்தி வழிப்பாதையையும், இரும்பு வழிப்பாதையையும் உருவாக்கினர். இதுபோல், எகிப்தில் தமிழர்கள் வணிகம் செய்ததற்கும், ஆட்சி செய்ததற்கும், ஏராளம் தொன்ம அடையாளங்கள் அந்நாட்டில் நிறைந்து உள்ளன.

(எகிப்து காசா (giza) பிரமீடு)

அதாவது, எகிப்து என்றால் அனைவரின் கண்கள் முன்பு வரும் மூன்று முக்கிய நினைவுகளில் எகிப்து பிரமீடு, நைல் நதி மற்றும் இறந்த உடலை பதப்படுத்தும் உடல் (மம்மி). இதில், எகிப்து பிரமீடுகளில் தமிழி எனப்படும் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மொழியின் அடையாளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராமானுஜரின் உடல் மூலிகை தைலம் மூலம் பதப்படுத்தப்பட்ட முறையே, எகிப்திலும் நடைமுறையில் இருந்து வந்தது. இரண்டு இடங்களில் ஒரே மாதிரியான உடல் பதப்படுத்தப்படும் முறை, இரண்டு நிலங்களுக்கும் உள்ள ஒப்புமையை வெளிக்காட்டுவதாக உள்ளது. 

( தமிழர்கள் பருத்தியால் செய்யப்பட்ட பாய் மரப்படகு மாதிரி )

அதாவது, இமயம் முதல் குமரி வரை ஆட்சி செய்த ஆயி மன்னர்களின் ஆட்சிப்பகுதியான தமிழகம் கரை ஆயி நாடு என அழைக்கப்பட்டது. சங்க இலக்கியத்தில் கரை ஆயி நாடு என அழைக்கப்பட்ட இங்கிருந்த, தமிழர்களுக்கும், எகிப்தியர்களுக்கும் இடையே வணிக தொடர்புடையதில் எகிப்தின் அலெக்சாண்டியா துறைமுகம் மிக முக்கியமானவையாக இருந்துள்ளது. 

எகிப்தின் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு (கி.மு 3,000) முந்தைய ஆண்டில் ஆயி மன்னர்களின் ஊடுருவல் எகிப்தில் இருப்பதை தொல்லியல் தகவல்கள் நிரூபிக்கின்றன. அத்துடன்,அத்தி என்று அழைக்கக்கூடிய தமிழக பெண் ஆட்சி புரிந்தார் என்பதற்கான தரவுகளும் கிடைக்கப்பெற்று வருகின்றன. இதில்,
எகிப்தில் லாண்ட் ஆப் புண்ட் என்ற இடத்தில் 3 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த பரோ மன்னர்களுக்கும் (மா மன்னர், பெரிய மன்னர்) தமிழர்களுக்கும் வணிகத்தில் தொடர்பு உள்ளது என்பதை ’’டீர் எல் பகரி” என்ற கோயில் தரவுகள் இன்றளவும் உறுதி செய்கின்றன. 

(பரோ மன்னரின் மனைவியாக இருந்த தமிழ் பெண் அத்தி)

எகிப்து ஆராய்ச்சியர்களில் பிலிண்டஸ் பெட்ரி என்ற ஆய்வாளர் எகிப்தியர்களின் பூர்வீகம் பற்றி ஆய்வு செய்யும் போது சேகரித்த மண்டை ஓடுகள் மூலமாக, எகிப்தில் முதல் முதலாக வந்த தொன்மை மக்கள் இந்தியாவின் தமிழகத்தில் தென் பகுதியை சார்ந்தவர்கள் என்ற முடிவை வைத்தார். எகிப்தின் 18ம் தலைமுறையின் பருவ மன்னர்களும், தமிழர்களும் செங்கடலை பயன்படுத்தி செம்பு, யானை, மயில் தோகை, வைரம், வைடூரியம், மானிக்கம், உப்பு, மரம் போன்றவற்றை வணிகம் செய்துள்ளனர். எகிப்தின் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புகழ் பெற்ற ஏஜியண்ட் கடலில் உள்ள கிரேக் தீவும். அங்கு அரசு ஆண்ட மீனோவான் வம்சம் சேர்ந்த திரமிளம் என்ற மொழி பேசிய பாண்டிய மன்னர்களுக்கும் உள்ள தொடர்பு செங்கடல் வழியாக நடைபெற்றதற்கான அடையாளங்கள் உள்ளன. இவை, எகிப்தின் சாக்கட்ரோ என்ற தீவில் உள்ள செங்கடல் நுழைவு வாயிலில் இன்றளவும் தமிழி எனப்படும் தமிழ் எழுத்துக்களில் உள்ளன. 

(எகிப்து நாட்டில் கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் தமிழி எழுத்துக்கள் )

எகிப்து, செங்கடலில் உள்ள 16 துறைமுகங்களில் அல்கோசிகாதீம், பெர்னிக்கோ என்ற 2 துறைமுகங்களில் கோரா, பூமான் என்ற தமிழ் மன்னர்களின் பெயர்கள் அங்கிருக்கும் பானை ஒடுகளில் குறிப்புகளாக உள்ளது. எகிப்தின் பாசிர் அல் கோதிம் என்ற இடத்தில் செய்த ஆய்வுகளில் தமிழி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடு கிடைத்து வருகிறது. அதுபோல, தமிழர்களின் மரபு சார்ந்த வேட்டையாடும் கருவியான வளரி எகிப்து பழங்குடியினரின் பழக்கத்தில் இருந்து வந்தது. 

(எகிப்து நாட்டு அருங்காட்சியத்தில் இருக்கும் வளரி புகைப்படம் )

எகிப்து நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான பிரமீடுகளில் காசா பிரமீடு மிக பெரியதாக உள்ளது. இதில், தமிழகத்தின் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழக்கத்தில் இருந்த தமிழி எழுத்துக்கள், காசா பிரமீடு நுழைவு வாயிலில் ”கந்தன்’’ என்ற பெயராக எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த தமிழ் மொழி ஆய்வாளர் மதிவாணன் இதனை உறுதி செய்துள்ளார்.

(எகிப்து, காசா பிரமீடு நுழைவு வாயிலில் இருக்கும் கந்தன் என்ற தமிழி எழுத்து)

எகிப்தின் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் கெர்மா என்ற மன்னரின் குறிப்புகளில் எகிப்து நாட்டை 7 மன்னர்கள் ஆட்சி செய்தது தெரிய வருகிறது. இதில், கரை ஆயி நாடு எனப்படும் தமிழகத்தை சேர்ந்த மனக்கன் என்ற மன்னரும் ஒருவராக இருந்துள்ளார். இவரை, கிரேக்க மன்னர்கள் போரிட்டு தோற்கடித்துள்ளனர் என்பது வரலாற்று குறிப்புகளில் உள்ளது. இதன் மூலம், எகிப்துத்துக்கும் தமிழகத்திற்கும் இடையே வணிகம் மட்டுமில்லாமல், ஆட்சி, அதிகாரத்திலும் பெரும் தொடர்பு இருந்துள்ளது என்பது சரித்திர குறியீடாக உள்ளது. 

(எகிப்து நாட்டின் கடல் வழிப்பாதை செயற்கைகோள் புகைப்படம்)

ஆஸ்திரியா நாட்டின் வியண்ணா அருங்காட்சியகத்தில் பழமை வாய்ந்த ஓலைச்சுவடி ஒன்று உள்ளது. இதில், எகிப்தின் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்திற்கும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையிலான வணிக தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் முசிறி பகுதியில் வாழ்ந்தவர்களுக்கும் எகிப்து பழங்குடியினருக்கும் இடையே வாழ்வியல் ஒற்றுமை, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு மரபு போன்றவை ஒன்றாக உள்ளது. அதனுடன், இருவரிடையேயான வணிகத்தின் போது நுண்ணிய வணிக தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது அறியப்பட்டுள்ளது. அதாவது, வணிகத்திற்கு தேவையான அளவிகள், பொருள் மதிப்பறியும் கருவிகள், ஏற்றுமதி, இறக்குமதிக்கான எளிமை முறைகள் போன்றவற்றை பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் செய்தனர் என்பது தரவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வாளர் ராஜன் இதனை தனது ஆய்வுகள் மூலம் உறுதி செய்துள்ளார்.

தமிழகத்தின் வடுவூர் துரைசாமி அய்யங்கார் என்ற ஆய்வாளர் 60 ஆண்டுகளுக்கு முன்னர் “ நீண்ட விடுபட்ட சங்கிலி’’ (The long missing link) என்ற நூலை எழுதினார். இதில், எகிப்து நாட்டில் தமிழ் வைணவம் பரவிய விதம், தமிழர்களின் பண்பாடு முறைமைகள், மொழி கூறுகள், தமிழக பெண்கள் எகிப்து மன்னர்களை திருமணம் செய்த அடையாளங்கள் போன்றவற்றை குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும், அக்கால சூழலில், துரைசாமியின் தரவுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், எகிப்தின் இன்றைய ஆய்வுகளில் கிடைக்கும் தரவுகள் மூலம் எகிப்தியர்கள், தமிழர்கள் இடையிலான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, உலகில் முதன் முதலில் கடல் கடந்த மதம் மாலியம் என்று சொல்லப்படும் தமிழரின் வைணவம் எகிப்து நாட்டில் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

(எகிப்து அருங்காட்சியத்தில் இருக்கும் மாலியம் என்ற தமிழ் வைணவர் புகைப்படம்)

அதுபோல, உலகம் முழுவதும் பரவிய கிருஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் ஏசு பிறக்கும் போது, சிலுவையில் அறையப்படும் போதும் செங்கடல் வழியாக மூன்று மன்னர்கள் சந்தித்தனர் என்ற பதிவு உண்டு. உலகிலே மூன்று மன்னர்களை ஒன்றாக அழைப்பது தமிழகத்தின் சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர்களை மட்டும்தான். அந்தவகையில் கடல் பயணத்தில் சிறந்து விளங்கிய, செங்கடல் வழியாக வணிகம் செய்த தமிழக அரசர்களே ஏசுவை பார்த்தவர்களாக இருக்க முடியும்.

எகிப்தில் இஸ்லாம் மதம் அதிகமாக இருந்தாலும் வழிபாட்டு முறைகளில் இயற்கை வழிபாடு பெரும் பங்கு கொண்டிருக்கிறது. உலகில் மதம் உருவாவதற்கு முன்னர் உலகின் மூத்த குடியான தமிழர்களின் இயற்கை வழிபாட்டு முறைகளே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. மதம் உருவான பின்னர், நில அமைப்பு, மொழி, பழக்க வழக்கத்திற்கு ஏற்ப அதன் நிலைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால், எகிப்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான தொன்ம அடையாளங்கள் பன்முக நிலைகளில் ஏராளம் உள்ளது.

(உலகில் தமிழர்கள் மேற்கொண்ட கடல் வழிப்பாதை)

எகிப்தின் பழமை வாய்ந்த இடத்தில் அகழ்வாய்வு செய்தால், தமிழரின் தொன்மை வாய்ந்த அடையாளங்களை உலகம் அறிய செய்யலாம். உலகம் முழுவதும் 18 நாடுகளை தமிழர்கள் ஆட்சி செய்தனர் என சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உண்டு. அதாவது, அங்கம், அரணம், கலிங்கம், கவுசிகம், காம்போசம், கொங்கனம், கோசலம், காலகம், சிங்களம், சிந்து, சீனம், திராவிடம், துளுவம், பப்பரம், மரகதம், மராடம், வங்கம், சோனகம் போன்ற நாடுகளை ஆட்சி செய்துள்ளனர். இதில், சோனகம் என்பது எகிப்தில் இருக்கும் அரேபியர்களை குறிக்கும். தமிழர்கள் எகிப்தை கைப்பற்றி ஆட்சி செய்தனர் என்பதற்கான அடையாளமாக இருந்து வருகிறது.

தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உறவு பாலமாக எறித்திரையன் என்ற செங்கடல் பகுதி இருந்தது. ஆனால், எகிப்தின் அருகேயுள்ள நடு நிலக்கடலின் கிரேட் தீவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எரிகல் விழுந்ததில் செங்கடல் பகுதி மறைந்தது. இதனால், எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்குமான கடல் வணிகம் சுமார் 1000 ஆண்டுகள் தடைபட்டது. அதன்பின், பிரஞ்ச் அரசர் நெப்போலியன் காலத்தில் எகிப்து, அலெக்சாண்டியா துறைமுகத்தின் கால்வாய் மூலம் மேற்கொள்ளும் வணிக மதிப்பை உணர்ந்து கால்வாய் சீரமைக்கும் மாபெரும் பணியை தொடங்கினார். நெப்போலியன் அரசரின் கடும் முயற்சிக்கு பின் செங்கடல் நுழைவு பகுதி சீர் செய்யப்பட்டு சூயஸ் கால்வாய் என அழைக்கப்பட்டு வருகிறது. இதனை, கிரேக்க நாட்டை சேர்ந்த பெருக்குளஸ் என்ற அறிஞரின் “ பெரிபிலஸ் ஆப் தி எரிதிரையன் சீ” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(எகிப்து நைல் நதி நாகரீகத்தை விளக்கும் புகைப்படம் மாதிரி)

உலகை வியக்க வைக்கும் பிரமீடுகள், நைல் நதி விளை பொருட்களும் உலக மக்களை ஈர்க்க கூடியவை. உலகை கடலால் இணைத்த பண்டைய தமிழும் நடு நிலக் கடல் நாகரீகம் எப்படி செங்கடல் வழியாக எகிப்தின் மூலமாக உலகை இணைத்து என்பதற்கான தரவுகள் இன்றைய இணைய வளர்ச்சியில் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரத் தொடங்கியுள்ளது. தமிழர்கள் இனி செய்ய வேண்டியது மேற்கு உலகை இணைப்பதற்கான பாலமாக விளங்கிய எகிப்து நாகரீகத்தின் தொல்லியல், மரபு, மொழி, பண்பாட்டு, காலநிலை தரவுகளை மீள் ஆய்வுகள் செய்ய வேண்டும். அதன் மூலம், இன்றைய இணைய வளர்ச்சியை பயன்படுத்தி எகிப்தில் வாழும் தமிழர்கள் மூலமாக பண்டைய எகிப்து வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்து திரைக்கடல் ஓடிய தமிழர்களின் வரலாற்றை உலக மக்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். 

தமிழர்களை கடலால் இணைத்த ஒரிசா பாலு

உலக வரலாற்றில் தமிழர்களுடைய பங்களிப்பை ஆய்வு செய்து வரும் கடல் சார் தொன்மை ஆய்வாளர் ஒரிசா பாலு இதுவரை மலேசியா, தாய்லாந்து, கொரியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்து வந்தவர். உலகம் முழுவதும் இருக்கும் 183 நாடுகளில் எழுத, பேச, படிக்க தெரிந்த சுமார் 40 நாடுகளில் அந்த நாடுகளின் குடிமகனாக உள்ள தமிழர்களின் மூலமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

உலகை கடலால் இணைத்த தமிழர்களின் வரலாற்றை ஆய்வு செய்து மறுபடியும் தமிழர்களின் கடல் சார் வணிகத்தையும், உற்பத்தி திறனையும் உலக நாடுகளில் தமிழர்களை தொழில் முனைவர்களாக உருவாக்கும் சிந்தனையில் தொடர் பணிகளை செய்து வருகிறார். இந்த வரிசையில், உலகின் மேற்கு பகுதியை கடலால் இணைத்த எகிப்து வரலாற்றில் தமிழர்களின் பங்களிப்பை தமிழர்கள் உணர்வதற்கான செய்த ஆய்வுளின் தொகுப்பு இதற்கு அடுத்தப்படியாக, கிரேக்கத்திற்கும், நடு நிலக்கடல் நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மன், ஆலந்து, துருக்கி, பல்கேரியா, மடகாஸ்கர் மற்றும் பல நாடுகளில் உள்ள தமிழ் தொடர்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில், திரைமீளர்கள் போல் வெற்றி பயணத்தை தொடர்ந்து வருகிறார் ஒரிசா பாலு.