யாழ். ஊர்காவற்துறையில் மதகுரு ஒருவர் கைது !

ஆசிரியர் - Admin
யாழ். ஊர்காவற்துறையில் மதகுரு ஒருவர் கைது !

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதேசத்தில் , மதகுரு ஒருவர் ஊர்காவற்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் உந்துருளி செலுத்தியதன் காரணமாகவே, இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மதகுரு, வாகன அனுமதி பத்திரம் இன்றி உந்துருளியை செலுத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மதகுருவினை, இன்று ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.ரியாஸ் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது , சந்தேகநபருக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம், விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மதகுரு என்பதால் அவருக்கு நீதிமன்றம் சிறப்பு மன்னிப்பு வழங்கவேண்டும் என, மதகுரு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வலியுறுத்தினார்.

அதனை நிராகரித்துள்ள நீதவான், இவ்வாறானவர்கள் சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த உந்துருளியின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் வரை, உந்துருளியை காவற்துறையின் பொறுப்பில் வைத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.