நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை பாதசாரதிகளுக்கு எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை பாதசாரதிகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழை­யு­ட­னான கால ­நிலை தொடரும் என கால­நிலை அவ­தான நிலையம் அறி­வித்­துள்­ளது.

இதன் காரணமாக நெடுஞ்­சா­லையில் வாக­னங்­களை செலுத்­துவோர் அதிக கவனம் செலுத்த வேண்­டு­மென போக்­கு­வ­ரத்து பொலிஸார் சார­தி­க­ளுக்கு அறி­வு­றுத்தல் விடுத்துள்ளனர்.

அத்தோடு அதி­வேக நெடுஞ்­சா­லை­களில் அதிக விபத்­துக்கள் பதி­வா­கி­யுள்­ளது.

இந் நிலையில் அதி­வேக நெடுஞ்­சா­லை­களில் வாகனத்தை செலுத்துவோர் மணித்­தி­யா­ல­த்­திற்கு 50 முதல் 60 மீற்றர் வேகத்தில் வாக­னங்­களை செலுத்­து­மாறு கேட்டு கொண்­டுள்­ள­துடன் இரண்டு வாக­னங்­க­ளுக்கு இடை­யி­லான இடை­வெளியை 2 மீற்­ற­ராக வைத்­து­க் கொள்ள வேண்டும் என அதி­வேக நெடுஞ்­சாலை தகவல் பிரிவு அறி­வித்­துள்­ளது.

நாட்டின் பெரும்­பா­லான பகு­திகளில் பனி­மூட்­டத்­துடன் மழை­வீ­ழ்ச்சி காணப்­படும் என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.

மத்­திய, வடமத்­திய, சப்­ர­க­முவ, மேற்கு, வடமேற்கு, ஊவா மாகாணங்­களில் காலி, மாத்­தறை, அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் 24 மணித்­தி­யா­லங்­களில் 150 மில்லி மீற்­ற­ருக்கும் அதி­க­மான மழை வீழ்ச்சி பதி­வா­கி­ய­துடன் சில பிர­தே­சங்­களில் 100 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதி­க­மான மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் பெரும்­பா­லான பகு­தி­களில் சில நேரங்­களில் கடும் காற்று ஏற்­படும் எனவும் மலைப்­பாங்­கான பகு­தி­களில் அதிக மழை பெய்­வ­தற்­கான வாய்ப்பு காணப்­ப­டு­வ­தா­கவும் கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்துள்ளது.

மின்னல் மற்றும் இடி­யுடன் கூடிய கால­நிலை நிலவும் பிர­தே­சத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.