யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரது சடலம் மீட்பு!

ஆசிரியர் - Admin

யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்தடியில் இன்று காலை நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகிலே அவர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

மருதனார்மடம்-கைதடி வீதியில், கோப்பாய் பாலத்தடியில் உள்ள பரவைக் கடல் ஓரமாக இன்று காலை நபர் ஒருவரது சடலம் காணப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் குறித்த நபர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளி ஒன்றும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான தடயவியல் பரிசோதனைகளை யாழ்ப்பாணம் குற்றப் பிரிவுப் பொலிஸார் மேற்றகொண்டுவரும் நிலையில் இதுகுறித்த விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.