யாழில் நேற்றிரவு நான்கு இளைஞர்கள் வாள்களுடன் கைது; பொலிஸ் தெரிவிப்பு!

ஆசிரியர் - Admin
யாழில் நேற்றிரவு நான்கு இளைஞர்கள் வாள்களுடன் கைது; பொலிஸ் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் மடத்தடி வீதியில் வாள்களுடன் நின்ற 4 இளைஞர்கள் நேற்றிரவு யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணப் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் 4 இளைஞர்கள் வாள்களுடன் வீதியில் நின்றுள்ளனர்.

குறித்த நான்கு இளைஞர்களையும் சுற்றிவளைத்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர் குறித்த நான்கு இளைஞர்களையும் கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் யாழ்.மடத்தடி மற்றும் இராசாவின் தோட்டம் வீதிப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் நால்வரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.