போலி விசாவில் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்றவர்களுக்கு பிணை

ஆசிரியர் - Admin
போலி விசாவில் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்றவர்களுக்கு பிணை

போலி விசாவைப் பயன்படுத்தி நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைதுசெய்யப்பட்ட நால்வருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றம் நேற்றைய தினம் அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது.

குறித்த நபர்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் ஊடாக இத்தாலி மற்றும் ஜேர்மன் நாடுகளுக்கு செல்ல முற்பட்ட வேளை கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் பருத்தித்துறை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.