ஐபோன் எக்ஸ் மற்றும் கேலக்ஸி எஸ்8-ஐ குறிவைத்து களமிறங்கும் பெஸல்லெஸ் யூ11ப்ளஸ்

ஆசிரியர் - Admin
ஐபோன் எக்ஸ் மற்றும் கேலக்ஸி எஸ்8-ஐ குறிவைத்து களமிறங்கும் பெஸல்லெஸ் யூ11ப்ளஸ்

சமீபத்தில் எச்டிசி நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் சாதனமான யூ11 -ஐ அடுத்து வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவலொன்று வெளியானது. இது எச்டிசி யூ11+ ஸ்மார்ட்போனாக இருக்கலாமென தெரிகிறது.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில் காணப்படும் எச்டிசி சாதனம், கிட்டத்தட்ட ஸீரோ பெஸல்லெஸ் வடிவமைப்பை தழுவியுள்ளது. இது யூ11 ஸ்மார்ட்போனின் உயர்மட்ட மாடல் என்பதிலும், இது 18:9 என்ற விகிதத்தில் ஒரு திரை அளவை கொண்டதாக இருக்கும் என்பதும் உறுதி.
இந்த அளவிலான டிஸ்பிளேவை கண்டு ஆச்சரியப்பட தேவையில்லை. ஏனெனில், எல்ஜி, சாம்சங் மற்றும் ஆப்பிள் போலவே எச்டிசி நிறுவனம் ஏற்கனவே தங்கள் புதிய போன்களில் புதிய அளவிலான ஸ்கிரீன் வடிவமைப்புகளை இடம்பெற செய்து வருகின்றன.

மேலும் யூ11+, "ஐபோன் எக்ஸ், அல்லது கேலக்ஸி எஸ்8 /நோட்8 மாடல்களை போல் இன்பினிட்டி டிஸ்பிளேவை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.
மேலும் இக்கருவி ஐபி68 சான்றிதழ் கொண்ட ஒரு பளபளப்பான உலோகம் மற்றும் கிளாஸ் மெட்டீரியலை கொண்டிருக்கலாம். இதனால் 5 அடி ஆழத்திற்குள் சுமார் 30 நிமிடங்கள் வரை தண்ணீரின் கீழ் பாதுகாப்பாக இருக்கும் திறன் கொண்டிருக்கலாம்.

கேமராவை பொறுத்தவரை, முன் பகுதியில் 8எம்பி செல்பீ கேமராவும், பின்புறத்தில், எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்ட 12எம்பி கேமராவும் இடம்பெறலாம். இந்நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட டீஸர், எச்டிசி யூ11+ ஆனது வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த மாடலானது, ஐபோன் எக்ஸ் மற்றும் கேலக்ஸி எஸ்8-ஐ அடங்கியுள்ள வசதியை தழுவியே வடிவமைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.