தமிழீழம் வேண்டும்.. யாழில் சிங்கள மாணவர்கள் கோஷம்!

ஆசிரியர் - Admin
தமிழீழம் வேண்டும்.. யாழில் சிங்கள மாணவர்கள் கோஷம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது வேண்டும்…. வேண்டும்… தமிழீழம் வேண்டும்…. என மாணவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.

இதேவேளை சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த சுலோகத்தைத் தாங்கியிருந்த மாணவரொருவரும் மேற்கண்டவாறு கோஷம் எழுப்பியுள்ளார்.யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து நேற்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதன் போது இராமநாதன் வீதி வழியாகப் பல்கலைக்கழக முன்றலை நோக்கிப் போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். இவ்வாறு சென்ற ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென உரத்த குரலில் வேண்டும்…. வேண்டும்… தமிழீழம் வேண்டும்…. என கோஷமிட்டுள்ளனர்.

சிங்கள மாணவர்கள் சிலரும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் அவர்களும் ஆதரவு தெரிவித்து கோஷமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.