இலங்கையின் வடக்கு கடல் பரப்பில் 86.4 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வட கடற்படை கட்டளை தலைமையக  அதிகாரிகள் முன்னெடுத்த விஷேட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் 86.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

28total visits,1visits today