2018ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மிகக்குறைவாக உரையாற்றிய 13 உறுப்பினர்கள் தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களில் 12பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதி நிதித்துவப்படுத்துவதுடன் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

அதன் பிரகாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களான சரத் அமுனுகம, இந்திக்க பண்டாரநாயக்க, தாராநாத் பஸ்நாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, லக்ஷ்மன் வசன்த்த பெரேரா, அங்கஜன் ராமநாதன், லொஹான் ரத்வத்த, சிறிபால கம்லத்,ஜனக்க பண்டார, ஆறுமுகன் தொண்டமான்,தேனுக விதானகமகே, துலிப் விஜேசேக்கர மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் வசந்த சேனாநாயக்க ஆகியயோரே கடந்த வருடம் மிகக்குறைவாக பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர்.

மேலும் 2018 ஆம் ஆண்டு 77பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றபோதும் மேல் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 7பேர் அதில் 30 நாட்களுக்கும் குறைவாகவே பாராளுமன்றத்துக்கு சமூகமளித்துள்ளனர்.

அதில் லக்ஷ்மன் வசன்த்த பெரேரா 16 நாட்கள் மாத்திரமே பாராளுமன்றத்துக்கு சமுகமளித்திருக்கின்றார்.  கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான பாராளுமன்ற ஹன்சாட் அறிக்கை தரவுகளை அடிப்படையாகக்கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

19total visits,2visits today